தியேட்டருக்கு வெளியே இருந்து உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லலாம்! எங்கே தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 04:57 pm
maharashtra-movie-goers-can-carry-food-items-inside-theatres-from-august-1-says-government

மகாராஷ்டிரா: வெளியே இருந்து உணவுப்பொருட்களை சினிமா தியேட்டருக்குள் கொண்டு செல்லலாம் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. 

இந்தியா முழுவதுமே வழக்கமாக சினிமா தியேட்டர்களுக்கு செல்லும் மக்கள், தியேட்டருக்குள் உள்ளே வைத்திருக்கப்படும் பொருட்களை வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தினாலும், அவர்கள் கட்டாயத்தின் பேரில் வேறுவழியில்லாமல் தியேட்டரில் வைத்திருக்கும் உணவுப்பொருட்களை வாங்குகின்றனர். தியேட்டருக்குள் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையை குறைக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடவடிக்கை எதுவும் இல்லை. 

இந்த சூழ்நிலையில், இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிரா அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, அம்மாநில மக்கள் வெளியே இருந்து உணவுப்பொருட்களை சினிமா தியேட்டருக்குள் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.அதேபோன்று தியேட்டருக்குள் விற்கப்படும் பொருட்கள் சந்தை விலையில் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த உத்தரவை பின்பற்றாத தியேட்டர் நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close