ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி லாபம்!

  Newstm Desk   | Last Modified : 13 Jul, 2018 07:20 pm

aadhaar-helped-save-rs-90-000-crore-says-uidai-chairman

ஆதார் திட்டத்தினால் இந்தியாவிற்கு ரூ.90,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். 

டிஜிட்டல் பயன்பாடு குறித்த ஒரு நிகழ்ச்சி ஐதராபாத்தில் உள்ள இந்தியன் பிஸினஸ் ஸ்கூல் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் சத்யநாராயணா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "கல்வி, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்காக ஆதாரை ஒரு நாளைக்கு சராசரியாக 3 கோடி பேர் வரை பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சுமார் 90,000 கோடி ரூபாய்க்கு மேலாக மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. அவர் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, உணவு மற்றும் பொது விநியோகம், ஊரக வளர்ச்சி ஆகிய துறைகள் அதிக வளர்ச்சியை கண்டுள்ளன. பயோமெட்ரிக் குறித்து மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படுகின்றன. முக்கியமாக மோசடிகளை கண்டறிதல் மற்றும் தடுப்பு முறைகள் ஆகியவற்றில் தேவைப்படுகிறது.

அதே நேரத்தில் மக்கள் பல்வேறு திட்டங்களில் பயன்பெறும் வகையில், ஆதார் உபயோகிக்கப்படுகிறது. தற்போதுள்ள ஆதார் முறையினால் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மருத்துவக் காப்பீடு திட்டம் பெற ஆதார் கட்டாயம் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close