மாநிலங்களவையில் புதிதாக 4 எம்.பிக்கள் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2018 12:37 pm

four-newly-elected-mp-s-of-rajya-sabha

சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா உள்ளிட்ட 4 பேரின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து, மாநிலங்களவையில் புதிதாக 4 நியமன எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலங்களவையில் சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா, அனுஆகா மற்றும் கே. பராசுரன் ஆகிய நால்வரின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து, புதிதாக 4 நியமன எம்.பிக்கள் நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  விவசாய சங்கத்தலைவர் மற்றும் தலித் சங்கத்தலைவர் ராம் ஷேக்கல், எழுத்தாளர் ராகேஷ் சின்ஹா, சிற்பக் கலைஞர் ரகுநாத் மொஹபத்ரா, பரதநாட்டியக் கலைஞர் சோனல் மன்சிங் ஆகியோர் எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement:
[X] Close