திருப்பதியில் ஆகஸ்ட் 9 முதல் 17 வரை தரிசனம் ரத்து!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2018 12:52 pm
tirupati-tirumala-darshan-cancels-from-august-9-to-17

திருப்பதியில் ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகின்றனர். இதையடுத்து ஆகஸ்ட் 9ம் தேதி முதல் 17ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 9ம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதி கிடையாது. 

ஆகஸ்ட் 12 தேதி முதல் 16 தேதி வரை திருமலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதால் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் 17ம் தேதி காலை 6 மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயில் அறங்காவலர் குழு தலைவர் புட்டா சுதாகர் யாதவ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close