எச்சரிக்கை! ஜூலை 31க்குள் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாவிடில் ரூ.10,000 வரை அபராதம்!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2018 01:17 pm

file-itr-before-july-31-to-avoid-heavy-fine-of-up-to-rs-10-000

வருமான வரி கணக்கை ஜூலை 31க்குள் தாக்கல் செய்யாவிடில் அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

2017-18ம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை வரும் ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமானவரித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் ரூ.5 லட்சம் வருமானத்திற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.

வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்கு மேல் செலுத்த நேரிட்டால் அவர்களுக்கு ரூ.5,000 அபராதம் என்றும், டிசம்பர் 31க்குள் மேல் செலுத்தினால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கை வருமானவரித்துறை அலுவலகத்திலும் நேரில் சென்று செலுத்தலாம். 

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close