பிப்ரவரிக்குள் 50 பொதுக்கூட்டம்: தேர்தலுக்கு ஆயத்தமான பிரதமர்!

  Padmapriya   | Last Modified : 14 Jul, 2018 04:34 pm
pm-modi-to-address-50-rallies-across-india

2019ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்காக, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். முதல்கட்டமாக இன்று உத்தர பிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதியில் அவர் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். 

2019ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக எப்போதோ தொடங்கிவிட்டது. கட்சியின் தேசியத் தலைவர் பாஜக தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார். மேலும், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி கள விவரங்களை அமித் ஷா அறிந்து வருகிறார். 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்துக்காக நாடு முழுவதும் 50 இடங்களில் மக்களை சந்தித்துப் பேசுவார் என்று பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொதுக்கூட்டமும் 2 அல்லது 3 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் வகையில் மோடியின் சுற்றுப்பயணம் ஏற்பாடாகிறது. மொத்தத்தில் அவர் 100 மக்களவைத் தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யலாம் என்று யூகிக்கப்படுகிறது. 

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கப்பதற்கு முன்னரே, 100 மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரத்தை முடித்துவிடுவார் என பாஜக வட்டாரத் தகவல் தெரிவிக்கின்றது. அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகிய முக்கியத் தலைவர்களும் பிப்ரவரிக்குள் தலா 50 பொதுக் கூட்டங்களில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வாரணாசியிலிருந்து தொடக்கம்...

முதற்கட்டமாக மோடி முதலில் தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு இன்று செல்கிறார். பின்னர் அங்கிருந்து அசம்கர், மிர்சாபூர் பகுதிகளில் மக்களை சந்திக்கின்றார். அசம்கர் செல்லும் அவர் 340 கி.மீ.  தூரத்திற்கான பூர்வாஞ்சல் விரைவு சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.  இந்த சாலை  உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி, அமேதி, சுல்தான்பூர், பைசாபாத், அம்பேத்கர் நகர், அசாம்கர், காசிபூர் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களை இணைக்கக் கூடியது. 

அடிக்கல் நாட்டும் விழாவை தொடர்ந்து நாளை மிர்சாபூர் சென்று அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close