'இந்து பாகிஸ்தான்' சர்ச்சை: சசி தரூருக்கு கொல்கத்தா நீதிமன்றம் சம்மன்!

  Newstm Desk   | Last Modified : 14 Jul, 2018 04:18 pm
shashi-tharoor-summoned-by-kolkata-court-over-his-hindu-pakistan-remark

2019 தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், இந்தியா என்பது 'இந்து பாகிஸ்தான்' ஆகி விடும் என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பேசியிருந்ததற்கு எதிராக கொல்கத்தா நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. 

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், "வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால் சிறுபான்மையினருக்கான உரிமைகள் மறுக்கப்படும்.  அவர்கள் பாகிஸ்தானை போன்று ஒரு புதிய அரசியலமைப்பை ஏற்படுத்துவார்கள். தொடர்ந்து வெற்றி பெற்றால் இந்திய நாடு என்பது இந்து பாகிஸ்தானாக மாறி விடும்.  மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, மௌலானா ஆசாத் போன்ற தலைவர்கள் எதற்காகப் போராடினார்களோ அது இல்லாமலே போய்விடும்" என பேசியுள்ளார். காங்கிரஸ் எம்.பியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இதற்கு பாஜக செய்தித் தொடர்பாளர் கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், காங்கிரஸ் எம்.பி பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார். 

இதையடுத்து, சசி தரூர் பேசியதற்கு எதிராக, வழக்கறிஞர் சுமீத் சவுத்ரி கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிறகு, வரும் ஆகஸ்ட் 14ம் தேதி சசி தரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close