ட்ரம்பை தாஜா செய்யும் இந்தியா... பதற்றம் குறையுமா?

  Padmapriya   | Last Modified : 14 Jul, 2018 11:54 pm

washington-is-said-to-have-indicated-to-new-delhi-that-the-trump-administration-is-favourably-considering-the-invite

2019ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 

இந்திய குடியரசு தினம் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றிவைத்து, கண்கவர் அணிவகுப்பை பார்வையிடுவார். இந்த கண்காட்சியை காண, கொண்டாட்டத்தில் பங்கேற்க வெளிநாட்டு தலைவரை அழைப்பது வழங்கம். அந்த வகையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ட்ரம்பை அழைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு ட்ரம்புக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதை ட்ரம்ப் ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா - இந்தியா இடையே விசா நடைமுறை பிரச்னை, வர்த்தக முரண்பாடுகள், ஈரான் கச்சா எண்ணெய் விவகாரம் ஆகியவை இரு நாடுகளிடையேயான நல்லுறவு பாதிக்கச் செய்யவல்லதாக இருக்கும் சூழளில், இந்த உறவில் புத்துணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சில மாதங்களுக்கு முன்னரே குடியரசு தின விழாவில் பங்கேற்க ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக வெளியுறவுத துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய குடியரசு தினவிழாவுக்கு அமெரிக்க அதிபர் அழைக்கப்படுவது இது 2வது முறையாகும். முன்னதாக, 2015ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா கலந்துகொண்டார். அதனையடுத்து 2016ஆம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயும், 2017ம் ஆண்டில் அபுதாபி பட்டத்து இளவரசரும், 2018ம் ஆண்டில் ஆசியான் நாடுகளின் பத்து தலைவர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close