பள்ளி சமையலறையில் 60 விஷபாம்புகள்: அதிர்ந்து போன மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2018 08:52 am
60-venomous-snake-found-in-maharastra-school-kitchen

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளி ஒன்றின் சமையலறையில் 60 விஷபாம்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் இருக்கும் பங்கரா போகரே என்னும் கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸில்லா பரிஷத் பள்ளி. இந்த பள்ளியில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்ச்சி உள்ளது.

இந்த பள்ளியின் சமையலறையில் சமையல் வேலை பார்க்கும் பெண் கடந்த வெள்ளியன்று பாம்புகள் இருப்பதை பார்த்துள்ளார். சமையலுக்கு பயன்படுத்தப்படும் விறகு கட்டைகள் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் 2 பாம்புகளை பார்த்த அவர் கட்டைகளுக்குள் 50க்கும் மேற்பட்ட பாம்புகள் இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

இதனையடுத்து பாம்பு பிடிப்பவர் அழைத்து வரப்பட்டார். விக்கி தலாத் என்னும் பாம்பு பிடிப்பவரின் 2 மணி நேர கடுமையான முயற்சிக்கு பிறகு பாம்புகள் பிடிக்கப்பட்டன. அதன் பின் பாம்புகள் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மொத்தமாக அங்கு 60 பாம்புகள் பிடிப்பட்டன.

இதுகுறித்து பள்ளியின் தலைமையாசிரியர் பேசும் போது, “பாம்புகளை கண்டதும் அனைவரும் அதிர்ந்து விட்டோம். இந்த செய்தி கேட்டதும் கிராம மக்கள் கட்டைகளை எடுத்துக்கொண்டு வந்தனர்.அவர்களை தடுத்து பாம்பு பிடிப்பவருக்கு தகவல் அளித்தோம். அவர் முயற்சியால் அனைத்து பாம்புகளும் பிடிக்கப்பட்டது” என்றார்.

அந்த பள்ளியில் பிடிக்கப்பட்ட பாம்புகள் Russell's viper எனப்படும் வகையை சார்ந்தவை. ஆசியாவிலேயே மிகவும் கொடிய விஷயமுடைய பாம்புகள் இவை தான். இவை கடித்து வருடத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close