நாட்டிற்காக வாழ்ந்து இறந்தவர் என் தந்தை: ராகுல் காந்தி

  Newstm Desk   | Last Modified : 15 Jul, 2018 03:26 pm

rahul-gandhi-disapproves-sacred-games-censorship

தனது தந்தை இந்தியாவிற்காக வாழ்ந்து, இறந்தவர் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியான சேக்ரட் கேம்ஸ் என்னும் தொடரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக கருத்துக்கள் கூறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். மேலும் காங்கிரஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் அந்த வெப் சீரிஸின் இயக்குநர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, "‘ஆர்.எஸ்.எஸ்/ பாஜக கருத்து சுதந்திரம் இருக்கக் கூடாது என்று நினைக்கின்றன. ஆனால், கருத்து சுதந்திரம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமை என்று நான் நம்புகிறேன்.

எனது தந்தை, இந்தியாவுக்காக வாழ்ந்து மறைந்தவர். ஒரு வெப் தொடரில் வரும் கதாபாத்திரத்தின் வசனம் அதை மாற்றிவிட முடியாது’ என்று பதிவிட்டுள்ளார். செக்ரட் கேம்ஸ் என்னும் தொடர் கடந்த 6ம்தேதி வெளியானது. உலகம் முழுவதும 190 நாடகளில் 4 மொழிகளில் இது வெளியாகி உள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close