ஜம்மு காஷ்மீர்: அருவியில் பாறைகள் உருண்டு விழுந்து 7 பேர் பலி 

  சுஜாதா   | Last Modified : 16 Jul, 2018 09:14 am
jammu-and-kashmir-7-dead-33-injured-as-boulder-rolls-down-waterfall

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சியார் பாபா நீர்வீழ்ச்சியில் திடீரென பாறைகள் உருண்டு விழுந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்.  

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்கி வரும் ரியாசி மாவட்டத்தில் சியார் பாபா எனும் நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சிக்கு வருகை தரும்   சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக  இருக்கும். இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். மக்கள் பலர் மகிழ்ச்சியாக  நீராடிக் கொண்டிருந்த மயத்தில் திடீரென மலை உச்சியில் இருந்து பாறைகள் உருண்டு விழுந்தன. இதில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் மேலும் 33 பேர் காயமடைந்தனர்.   

இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பலியான 7 பேரின் உடல்கள் பத்திரமாக மீட்கப்பட்டு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்பு படையினர், பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சிலர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close