பிரதமர் நாட்டை பிரிக்க நினைக்கிறார்: மோடியை விமர்சித்த ஆனந்த் சர்மா

  Newstm News Desk   | Last Modified : 16 Jul, 2018 09:41 am

pm-sick-mentality-anand-sharma-about-modi-s-congress-men-comment

காங்கிரஸ் முஸ்லீம் ஆண்களின் கட்சியா என பிரதமர் கூறியிருப்பது அவரது மோசமான மனநிலையை காட்டுகிறது என காங்கிரசின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார். 

உ.பியில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொணடு பேசினார். அப்போது, " முத்தலாக் சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை. காங்கிரஸ் என்ன முஸ்லீம் ஆண்களின் கட்சியா?.. முஸ்லிம் பெண்களை பாதுகாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் தடையாக உள்ளன" என பேசினார். 

பிரதமரின் இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கும் நிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பதிலளித்துள்ளார். "அவர், பிரதமர் பதவிக்குரிய மதிப்புக்கு மோடி தொடர்ந்து பாதிப்பை ஏற்படத்துகிறார். காங்கிரஸ் பற்றி அவர் பேசியதை கடுமையாக எதிர்க்கிகோம். 

அந்த கருத்து அவரது மோசமான மனநிலையையே காட்டுகிறது. மோடி சமூகத்தை பிரிக்க முயற்சிக்கின்றார். சுதந்திர போராட்டத்தை நடத்திய கட்சி காங்கிரஸ். அதனை முஸ்லிம் ஆண்கள் கட்சி என கூறியது பிரதமருக்கு அழகல்ல. இந்த மனநிலை நாட்டுக்கே கவலையான விஷயம்.  பிரதமர் மோடி வரலாற்று உண்மைகளுக்கு எதிராக பேசி வருகிறார். 

நாட்டின் வரலாறே தெரியாத மோடி, தற்போது தனது சொந்த வரலாற்றை எழுதிக்கொண்டு இருக்கிறார். எங்கள் கட்சிக்கு மோடியிடமோ, பா.ஜ.கவிடமோ இருந்து எந்த சான்றும் தேவையில்லை" என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா பேசியுள்ளார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close