சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 10:09 am
pm-modi-president-ram-nath-kovind-wish-france-on-winning-fifa-world-cup-2018

உலகக் கோப்பை  கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

உலகக் கோப்பை கால்பந்து போட்டி  ரஷியாவில் நேற்று நடைபெற்றது. இதில், குரோசியா அணியை வீழ்த்திய பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில்  சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

இது குறித்து, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் "உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியினருக்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார்.  

மேலும்,  பிரதமர் நரேந்திர மோடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவானது," உலக கோப்பையை வென்றதற்காக பிரான்சுக்கு வாழ்த்துக்கள். உலக கோப்பை இறுதிப்போட்டியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதிப் போட்டியில் உற்சாகமாக விளையாடிய குரோசியாவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். உலகக் கோப்பையில் அவர்களின் செயல்திறன் வரலாற்று சாதனை" என பதிவிட்டுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close