காஷ்மீரில் எல்லைமீறி தாக்குதல்: தீவிரவாதி சுட்டுக்கொலை; இரு வீரர்கள் காயம்!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 11:21 am

j-k-1-terrorist-killed-2-army-personnel-injured-in-encounter-along-loc

காஷ்மீர் எல்லையில் இன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப்படையினருக்கும் இடையே நடந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும், பாதுகாப்புப்படையினரில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இன்று குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியதாக வந்த தகவலையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதிக்குச் சென்றனர். முதலில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்க, பாதுகாப்புப்படையினர் அதற்கு தகுந்த பதிலடி கொடுத்தனர். 

இதில் தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவரிடம் இருந்து ஏ.கே- 47 துப்பாக்கிகளும், வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டது.  மேலும், இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர். தாக்குதல் தொடர்ந்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close