கேரள பாதிரியாரின் முன்ஜாமீன் மனு நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!

  Newstm Desk   | Last Modified : 16 Jul, 2018 12:43 pm
kerala-church-sex-scandal-case-sc-to-consider-bail-plea-by-father-sony-varghese-tomorrow

கேரளாவில் பாவ மன்னிப்பு கேட்கச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில், முன்ஜாமீன் கோரி பாதிரியார் சோனி வர்கீஸ் தாக்கல் செய்துள்ள மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. 

கேரள மாநிலம் மலங்கரா ஆர்தோடக்ஸ் கிறிஸ்துவ சபையின் கீழ் இயங்கி வரும் மலப்பள்ளி சர்ச்சிற்கு பாவ மன்னிப்பு கேட்டு இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அவரது தவறை சுட்டிக்காட்டி, அந்த பெண்ணை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதலில் கிறிஸ்தவ சபை விசாரணை செய்து வந்தது. விவகாரம் பெரிதானதை அடுத்து வழக்கு, குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதன்படி, பாதிரியார்கள் ஜோப் மேத்யூ, ஜான்சன் வி. மேத்யூ ஆகியோர் கைது செய்யப்பட்டு பத்தனம்திட்டா சிறையில் அடைக்கப்பட்டனர். ஜெய்ஸ் கே.ஜார்ஜ், சோனி ஆபிரகாம் வர்க்கீஸ் ஆகிய இருவர் தலைமறைவாக உள்ளனர். 

இவர்களில் பாதிரியார் சோனி ஆபிரகாம் வர்க்கீஸ், முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இவரது மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கு  நாளை விசாரணைக்கு வரும் என உச்ச நீதிமன்றம் தகவல் தெரிவித்துள்ளது. இவரது மனுவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கிறது.

முன்னதாக, பாதிரியார் சோனி வர்க்கீஸின் முன்ஜாமீன் மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close