கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வரை கலாய்த்த பா.ஜ.க

  Newstm News Desk   | Last Modified : 16 Jul, 2018 02:07 pm

bjp-twitter-account-h-d-kumarasamy-s-emotional-speech

தான் நிம்மதியாக இல்லை என கர்நாடக முதல்வர் குமாரசாமி கண்ணீர் விட்டு அழுததை பா.ஜ.க கிண்டல் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. 

கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி நேற்று தனது கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசினர். அப்போது, "நீங்கள் எல்லோரும் உங்கள் சகோதரர் முதல்வராகி விட்டதை நினைத்து மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள், ஆனால் நான் சந்தோஷமாக இல்லை. நான் வலிகளை தாங்கி கொண்டு இருக்கிறேன். நான் தேர்தலுக்கு முன்பு சென்ற இடத்தில் எல்லாம் மக்கள் அவ்வளவு அன்பை காட்டினர். ஆனால், வாக்களிக்கும் போது என்னை மறந்துவிட்டனர்" என்று உணர்ச்சிகரமாக பேசி அழுதுவிட்டார். 

இந்நிலையில் குமாரசாமி அழுததை கிண்டல் செய்யும் வகையில் பா.ஜ.கவின் கர்நாடக ட்விட்டர் பக்கத்தில் கிண்டல் செய்து பதிவிட்டுள்ளது. 

அதில், "சிறந்த  நடிகர் விருது" என்று குறிப்பிட்டு குமாரசாமி பேசிய வீடியோவை இணைத்துள்ளனர். மேலும், "நமது நாடு சிறந்த நடிகர்களை எப்போதும் உருவாக்கி வருகிறது. நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பால் மக்களை கவர்ந்து வந்துள்ளனர். இதோ இன்னோரு நடிகர் குமாரசாமி. தொடர்ந்து பொதுமக்களை தனது நடிப்பால் ஏமாற்றி வரும் நடிகர்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மஜத கடசியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close