குடிசைவாசிகளுக்கு விளக்கேற்றிய நடிகை! - மக்கள் மகிழ்ச்சி

  Padmapriya   | Last Modified : 16 Jul, 2018 06:54 pm

alia-bhatt-helps-light-up-40-houses-in-karnataka-with-solar-energy-see-pics

இந்தி நடிகை ஆலியா பட், கர்நாடக கிராம வீடுகளில் 200 பேர் பயன்பெறும் வகையில் சோலார் பல்ப்களை வழங்கியுள்ளார். 

கர்நாடகா மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் கிக்கேரி என்ற கிராமம் உள்ளது. மின்சாரம் உள்பட எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கிராமத்துக்கு அரசு திட்டங்கள் எதுவும் சென்றடைவதில்லை. இந்த நிலையில்,  நடிகை ஆலியா பட், மி வார்ட்ரோப் இஸ்ஸ் சூ வார்ட்ரோப் (Mi Wardrobe is Su Wardrobe) என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் அங்குள்ள 40க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளில் வசிக்கும் சுமார் 200 மக்கள் பயன்பெறும் வகையில், சோலார் லைட்களை வழங்கியுள்ளார்.  

இது குறித்து ஆலயா பட் கூறுகையில், " இந்தியாவில் மின்சாரம் இல்லாமல் பல கிராமங்கள் உள்ளன. அவர்கள் இருட்டில் முடங்கியுள்ளனர். மாலை நேரத்துக்கு பின் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை. குழந்தைகள் படிக்க சிரமப்படுகின்றனர். பெண்கள் அவதிக்குள்ளாகின்றனர்.  சுற்றுச்சூழலுக்கு உகந்த சோலார் பல்ப்கள் வழங்கினால் அவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்தேன். பலரும் இதுபோன்ற மக்களுக்கு தங்கலால் முடிந்த உதவிகளை செய்தால் நல்லது" என்றார்.

மேலும், ஸ்டைல் கிராக்கர் என்ற அமைப்பும் ஆலியா பட்டின் ஆடை அணிகல்களை விற்று அதிலிருந்து கிடைக்கும் பணத்தை இது போன்ற உதவிகளுக்கு பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close