மதம் மாறினால் அரசு சலுகைகள் 'கட்' - எம்.பி கொடுக்கும் ஐடியா

  ஐஸ்வர்யா   | Last Modified : 17 Jul, 2018 08:26 pm
people-converting-religion-should-be-barred-from-govt-facilities-bjp-mp

மதம் மாறும் ஆதிவாசி, பழங்குடியின மக்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளையும் தடைசெய்ய வேண்டும் என ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக எம்.பி. தினேஷ் கஷ்யப் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பேரணியில் பேசிய தினேஷ் கஷ்யப், பழங்குடியினர் வேறு மதங்களுக்கு மாறுவது தற்போது அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே மதம் மாறும் பழங்குடியின மக்களிடமிருந்து அரசின் அனைத்து சலுகைகளையும் பறிக்க வேண்டும். அரசின் சலுகைகளை நிறுத்தினால் பல அரங்கேறும் பல குற்றங்கள் கட்டுப்படுத்தப்படும். மேலும் இது என்னுடைய சொந்த கருத்து, மதம் மாறுபவர்கள் அரசாங்க வசதிகளை பெறக்கூடாது என நான் நினைக்கிறேன். இதற்கு ஆட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 16 ஆண்டுகளாக மத சுதந்திர சட்டத்தின் கீழ் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டினார். கடந்த வாரம் மட்டும் ஜார்கண்டில் பழங்குடியின மக்களை கட்டாய மதம் மாற்றம் செய்ததாக 16 பாதிரியார்களை போலிசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close