மகன் கொடுமைப்படுத்தினால் கொடுத்த சொத்தை பெற்றோர் திரும்ப பெறலாம்!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 10:00 am

ill-treated-father-can-take-back-property-gifted-to-son-mumbai-hc

பெற்றோரை சரியாக கவனித்துக் கொள்ளாத மகனுக்கு கொடுத்த சொத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என மும்மை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

மும்பையின் அந்தேரி பகுதியை சேர்ந்த முதியவர் தனது மகன் தன்னை கொடுமைப்படுத்தியதாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.  அவரது புகார் மனுவை விசாரித்த தீர்ப்பாயம் மகனுக்கு எழுதிக்கொடுத்த  சொத்து ஆவணத்தை ரத்து செய்தது. இந்நிலையில் தீர்ப்பாயத்தின் முடிவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவரது மகன் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்சித் மோரி மற்றும் அனுஜா பிரபுதேசாய் ஆகியோர் அடங்கிய அமர்வு தந்தை மற்றும் அவரது 2வது மனைவியை பராமரிக்க வேண்டியது மகனின் கடமை என குறிப்பிட்டனர். மேலும் பெற்றோர் மற்றும் முதியவர்கள் பராமரிப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி மகன் முறையாகக் கவனிக்கத் தவறினால் அவருக்கு கொடுத்த சொத்துகளை திரும்பப்பெற பெற்றோருக்கு உரிமை இருக்கிறது என்றுக் கூறி தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்துள்ளர். 

புகார் கொடுத்த மனுதாரரின் மனைவி கடந்த 2015ம் ஆண்டு உயிரிழந்தார். அப்போது மகன் மற்றும் மருமகளின் வற்புறுத்தலின் காரணமாக தனது சொத்தில் 50 சதவீதத்தை மகனுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இதனையடுத்து 2வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரையும் அவரது மனைவியையும் சரிவர கவனிக்காமல் அவர்களை மகன் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close