பிரதமர் கூட்டத்தில் விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 09:52 am
canopy-collapses-at-modi-s-bengal-rally-many-injured

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில், கூடாரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலம், மத்திப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மத்திய அரசு விவசாயிகளுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது, திடீரென கூட்டத்தின் ஒரு பகுதியில் கூடாரம் இடிந்து விழுந்தது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

பொதுக்கூட்டம் நிறைவடைந்த பிறகு இது குறித்து கேள்விப்பட்ட பிரதமர் மோடி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்குமாறு மருத்துவர்களிடம் அவர் கூறினார்.

பிரதமர் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் பிரதமரிடம் ஆட்டோகிஃராப் கேட்டுள்ளார். அந்த பெண்ணுக்கு ஆட்டோகிஃராப் வழங்கிவிட்டு விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close