பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 12:05 pm

the-public-won-t-take-the-law-as-per-their-wish-says-sc

பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன என உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "பசு பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. பசு பாதுகாவலர்கள் என்று கூறி எந்த ஒரு குடிமகனும் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு நடைபெறும் வன்முறையை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் மக்களை பாதுகாக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதுபோன்ற வன்முறைகளை தடுக்க, புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றம் ஆலோசனை நடத்தலாம்" என தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவங்களில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் என்னவிதமான நடவடிக்கைகள் கையாளப்படுகின்றன? என்பது அம்மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close