லோக்பால் அமைப்பை விரைந்து ஏற்படுத்துக: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 03:24 pm
lokpal-case-selection-committee-to-meet-on-july-19-to-constitute-search-committee

லோக்பால் அமைப்பை விரைந்து ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் லோக்பால் அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த 2ம் தேதி நடந்த இந்த வழக்கின் விசாரணையில், 10 நாட்களுக்குள் லோக்பால் அமைப்பிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெற வேண்டும் என மத்திய அரசிடம் கூறியிருந்தது. 

இன்றைய விசாரணையில், வருகிற ஜூலை 19ம் தேதி லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டம் நடைபெறும் என மத்திய அரசு பதிலளித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கூட்டம் முடிந்தபிறகு லோக்பால் அமைப்பு தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என ஜூலை 23 அன்று அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஜூலை 24ல் அடுத்த விசாரணை நடைபெறும் என வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ஜூலை 19ல் நடைபெறும் லோக்பால் உறுப்பினர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில், பிரதமர், மக்களவை சபாநாயகர், எதிர்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் பங்கேற்பர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close