சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பா.ஜ.க தொண்டர்கள் தாக்குதல்!

  Newstm Desk   | Last Modified : 17 Jul, 2018 06:20 pm

activist-swami-agnivesh-attacked-allegedly-by-bjp-workers-in-jharkhand

ஜார்கண்ட்டில் சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் மீது பா.ஜ.க யுவா மோர்ச்சா தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. 

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அக்னிவேஷ். இவர் ஹரியானா மாநில எம்.எல்.ஏவாக உள்ளார். முன்னாள் கல்வி அமைச்சர், அரசியல்வாதி, தயானந்த சரஸ்வதியின் ஆர்ய சமாஜ் பிரிவைச் சேர்ந்தவர் என பல்வேறு முகங்களை கொண்டவர். இவை அனைத்திற்கும் மேலாக இவர் பல்வேறு சமூக நல செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதனால் ஹரியானா மக்களுக்கு இவர் மீது மதிப்பும், மரியாதையும் அதிகம். 

இந்த நிலையில், ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து 355 கிமீ தொலைவில் பகூர் என்ற இடத்தில் நடந்த பழங்குடியின நிகழ்ச்சி ஒன்றில் அக்னிவேஷ் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த அவருக்கு எதிராக, பா.ஜ.க யுவா மோர்ச்சா தொண்டர்கள் கருப்புக்கொடியுடன் கோஷமிட்டனர். பின்னர் அவரை முற்றுகையிட்டு, சிலர் தாக்க ஆரம்பித்தனர். பின்னர் அக்னிவேஷின் ஆதரவாளர்கள் அவரை தடுத்து காப்பாற்றினர். இதில் சிறு காயங்களுடன் அக்னிவேஷ் தப்பினார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

மேலும் அக்னிவேஷ் பேசுகையில், "நான் அமைதியை கடைபிடிப்பவன். என் மீது ஏன் தாக்குதல் நடத்தினார்கள் என தெரியவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு போலீசார் வரவில்லை" என தெரிவித்தார்.

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close