மும்பை வெள்ளப்பெருக்கில் மூழ்கிய கார்...அபாய சூழலில் குடும்பத்தையே மீட்ட ஊர் மக்கள்!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 11:46 am

a-family-from-navi-mumbai-escaped-with-minor-injuries-after-their-car-fell-off-ghotgaon-river-bridge

நவி மும்பையில், வெள்ளப்பெருக்கில் மூழ்கி கொண்டிருந்த காரில் மாட்டிக்கொண்டு உயிருக்கு போராடிய குடும்பத்தினரை, தங்களது உயிரை பணையம் வைத்து  அந்தப் பகுதி பொது மக்கள் காப்பாற்றிய சம்பவத்தின் செல்போன் காட்சிகள் பரவாலாகி வருகிறது. 
 
வட மாநிலங்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தால் தத்தளித்து வருகின்றன. இதில் மகாராஷ்டிராவின் நிலை இன்னும் மோசமாகவே இருக்கிறது.  மெட்ரோ நகரமான மும்பையின் முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. 

இந்த நிலையில் நவி மும்பையில் டலோஜா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அதனை சுற்றிய சாலையில் சென்று கொண்டிருந்த காரை வெல்ல நீர் சூழ்ந்தது. காருக்குள் குழந்தைகள் உட்பட 4 பேர் இருந்தனர்.  சிறிது நேரத்தில், காரின் அரை பகுதி தண்ணீரில் மூழ்க தொடங்கியது. அப்போது அங்கிருந்த கிராம மக்கள், கயிற்றை கொடுத்து குடும்பத்தினரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர். 

காரை சுற்றி நீர் சூழ்ந்ததால், காரின் மேல் பகுதியில் குடும்பத்தினர் ஏறி உட்கார்ந்தனர். ஊர் மக்கள் அவர்களிடம் கயிற்றை கொடுத்து, மற்றொரு பக்கத்தில் ஐந்து நபர்கள் கயிற்றை இறுக்கமாக பிடித்து கொண்டு குடும்பத்தினர் ஒவ்வொருவரும் காரில் இருந்து இறங்கி கரையை அடைந்தனர். 

காரில் அஷ்ரப் கலில் ஷேக் (37 வயது), அவரது மனைவி ஹமிதா, இரண்டு குழந்தைகள் ஆகிய 4 பேரும் பத்திரமாக ஊர் மக்களால் மீட்கப்பட்டனர். இவர்களை தக்க நேரத்தில் காப்பாற்றிய நாராயன் கங்காரம் படில், லஹு நாராயன் படில், லக்‌ஷ்மன் வமன் துமால், துல்சிராம், ரூபேஷ் ஆகியோரை மும்பை காவல் துறையினர் பாராட்டியுள்ளனர். 

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close