ரயில்களில் ஷாப்பிங் வசதி அறிமுகம்!!

  சுஜாதா   | Last Modified : 18 Jul, 2018 06:09 am
cosmetics-small-gadgets-to-be-sold-on-express-trains

மத்திய ரயில்வே துறை எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிகள் ‘ஷாப்பிங்’ செய்யும் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

மத்திய ரயில்வே துறை மும்பையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.  இந்நிலையில்,  சென்னை எக்ஸ்பிரஸ், கோனார்க் எக்ஸ்பிரஸ், எர்ணாகுளம்-ஹஸ்ரட் நிஜாமுடின் துரண்டோ உள்ளிட்ட 3 ரயில்களின் ஏ.சி. பெட்டியில் ஷாப்பிங் செய்யும் வசதியை மத்திய ரயில்வே துறை அறிமுகம் செய்ய உள்ளது.

இது குறித்து மத்திய ரயில்வே அதிகாரி கூறியதாவது :  தற்போது சோதனைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், வெற்றி பெறும் பட்சத்தில் படிப்படியாக மற்ற ரயில்களில் இந்த வசதி செய்யப்படும். இதில், அழகுசாதன பொருட்கள், ஹெட்போன் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close