பா.ஜ.கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தயாராகும் காங்கிரஸ்

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 10:46 am
oppn-parties-to-move-no-confidence-motion-in-parliament

மழைக்காலக் கூட்டத்தொடரில் ஆளும் பா.ஜ.கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. 

மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக அக்கட்சி ஒரு மித்த கருத்துக்கொண்ட எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவாரத்தையில் ஈடுபட்டு வருகிறது. 

முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி இந்த முடிவில் இருப்பதாக அவர்கள் காங்கிரசுடன் இணைந்து இதில் செயல்படுவார்கள் என கூறப்படுகிறது. மேலும் நேற்று செலுங்கு தேசம் எம்.பிக்கள் குழு சென்னையில் தி.மு.க எம்.பி கனிமமொழியை சந்தித்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு அதரவு தர கோரிக்கை விடுத்தனர். முன்னதாக சிவசேனா கட்சியைச் சந்தித்து தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு கோரியது. 

முன்னதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நாளை தொடங்கும் மழைக்காலக் கூட்டத்தொடர் எந்த விதமான கூச்சலும் குழப்பமும் இன்றி அமைதியாக, ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே தெலங்கு தேசம் கட்சியும், காங்கிரஸும்  தனித்தனியாக மக்களவை செயலாளரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து மனு இன்று அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close