நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடக்கம்.. அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறுமா?

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 11:15 am

parliament-monsoon-session-to-begin-today

இன்று தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆளும் பா.ஜ.க அரசு கடைசி வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால் இந்த கூட்டத்தொடரில் முத்தலாக், ஓ.பி.சி பிரிவினருக்கான தேசிய ஆணையம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உ உள்ளிட்ட 18 முக்கிய  மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது. 

அதே நேரத்தில் பல்வேறு மாநில கட்சிகளும் தங்களது மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளை பற்றி பேச முடிவு செய்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதா, யுஜிசி-க்கு பதிலாக உயர் கல்வி ஆணையம் ஆகியவற்றிக்கு எதிராக அ.தி.மு.க அரசு உள்ளது. அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தீர்மானம் நிறைவேற்ற தி.மு.க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த நாடாளுமன்றக்கூட்டத்தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறித்து. 

இந்த நிலையில் இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, "கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டு மக்களின் அனைத்து பிரச்னைகளை பற்றி பேச மத்திய அரசு தயாராக உள்ளது" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close