நாடாளுமன்றத்தில் முதல்நாளே ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அட்டகாசம்- வீணாகும் மக்கள் பணம்!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 12:29 pm
ysr-congress-mps-protest-at-gandhi-statue-in-parliament-demanding-special-status-for-andhra-pradesh

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 18) தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. முத்தலாக், ஓ.பி.சி பிரிவினருக்கான தேசிய ஆணையம், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்டமுக்கிய  மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டிய சூழலில் ஆளும் பா.ஜ.க அரசு உள்ளது. இன்று காலை நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியும், கூட்டத்தொடரில் மசோதாக்களை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒத்துழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 

ஆனால், கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளே ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று உறுதியளித்து விட்டு மத்திய அரசு அதனை நிறைவேற்றாமல் இருப்பதை கண்டித்து அவர்கள் காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்துகின்றனர். இதனால் அவையில் மசோதாக்கள் நிறைவேற்றப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது. 

கடந்த கூட்டத்தொடரின் போதும், அ.தி.மு.க, தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிகளின் போராட்டத்தால் அவை முடங்கி, மசோதாக்கள் நிறைவேற்ற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close