Breaking : மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 04:37 pm

speaker-accepts-no-confidenence-motion

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில் முன்னரே வந்த தகவலை போலவே எதிர்க்கட்சிகள் ஆளும் பா.ஜ.கவிற்கு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரிக்கை வைத்தனர்.  

முதலாவது தெலுங்கு தேசம் கட்சி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்தது. அதன் பிறகு  காங்கிரஸ் சார்பிலும் தனியாக அந்த கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரிக்க இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அவர்களின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார். 

தெலுங்கு தேசம் கட்சியை பொறுத்தவரை இந்த அரசின் மீது குறிப்பிட்ட துறை என்று இல்லாமல் ஒட்டுமொத்தமாக அமைச்சரவை மீதும் அரசின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக தெரிவித்து உள்ளது. காங்கிரசும் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கிறது. மேலும் பா.ஜ.க அரசு கொடுத்த வாக்குகளை நிறைவேற்ற தவறிவிட்டது, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி வருகிறது, ஜி.எஸ்.டி., பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றினால் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இவற்றினால் மக்களின் நம்பிக்கையை அரசு இழந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. 

முன்னதாகவே அரசுக்கு எதிராக கொள்கை ரீதியில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவு தெரிவிப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. 

வருகிற 20ம் தேதி(வெள்ளிக்கிழமை) இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.