கொல்கத்தாவில் கொடூரம்: கணவனின் காதை அறுத்த மனைவி!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 08:10 pm
wife-cutsoff-husband-s-ears-who-is-20-years-younger-than-her

கொல்கத்தாவில் தன்னைவிட 20 வயது குறைவான கணவனின் இரண்டு காதுகளையும் மனைவி அறுத்த சம்பவம் நடந்துள்ளது. 

கொல்கத்தாவின் நர்கெல்தங்கா பகுதியை சேர்ந்தவர் தன்வீர். 20 வயதாகும் இவர்  தன்னை விட 20 வயது மூத்த மும்தாஜை இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். திருமணமான சில நாட்களிலேயே மும்தாஜ் அவரை கொடுமைப்படுத்த தொடங்கி உள்ளார். மும்தாஜிடம் இருந்து தப்பித்து பல முறை தன்வீர் வீட்டை விட்டு ஓடியுள்ளார். ஆனால் மும்தாஜின் ஆட்கள் அவரை மீண்டும் பிடித்து வந்துவிடுவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. 

தன்வீருக்கு சொந்தமான வீட்டை விற்று, அவரை தன்னுடைய வீட்டிலேயே தங்க வைத்திருக்கிறார் மும்தாஜ். மேலும், தன்வீரை சொந்த ஊருக்கு கூட செல்ல கூடாது என்று மும்தாஜ் கூறிவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு துப்பாக்கி முனையில் தன்வீரின் இரண்டு காதுகளையும் மும்தாஜூம் அவரது சகோதரியும் வெட்டியுள்ளனர். இதில் தன்வீர் மயக்கமடைந்துவிட்டதால் உயிரிழந்து விட்டாரோ என பயந்து அங்கிருந்து இருவரும் தப்பித்துள்ளனர். 

பின் தன்வீரின் நிலையறிந்த அவரது குடும்பத்தார் சம்பவ இடத்திற்கு வந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள மும்தாஜ் உள்ளிட்டவர்களைத் தேடி வருகின்றனர். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close