விவசாயிகள் பெயரில் மோசடி செய்த தொழிலதிபர்?

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 03:32 pm

maharashtra-businessman-got-rs-5-400-cr-loans-in-farmers-name-dhananjay-munde

மகாராஷ்டிராவில் விவசாயிகள் பெயரில் ரூ .5400 கோடி மோசடி செய்துள்ளதாக தொழிலதிபர் ஒருவர் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனஞ்ஜெய் முண்டே குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், "மகாராஷ்டிராவில் ரத்னாகர் குட்டே என்ற தொழிலதிபர், விவசாயிகள் பெயரில் போலி ஆவணங்களை கொடுத்து வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தாததால், பணம் செலுத்தக்கூறி விவசாயிகளின் பெயருக்கு நோட்டீஸ் வந்து கொண்டிருக்கிறது. நோட்டீஸ் வந்து, பின்னர் விசாரித்த பிறகே இது போன்ற மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. 2015ம் ஆண்டு முதல் 600க்கும் மேற்பட்ட விவசாயிகளின் பெயரில் கடன் வாங்கி ரூ. 5400 கோடி மோசடி செய்துள்ளார். ஒவ்வொரு கடனும் ரூ.25,000க்கு அதிகமான தொகையாகும். இது தொடர்பாக புகார் அளித்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்  விசாரணை  செய்து இதுவரை கைது செய்யாமல் உள்ளனர். இவ்வாறு விட்டுவைப்பதால் தான் நீரவ் மோடி போன்றவர்கள் வெளிநாடு தப்பிவிடுகின்றனர். மோசடி செய்பவர்களுக்கு அரசு உதவி செய்து வருகிறது" என்றார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close