சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடங்கள்; 3 பேர் பலி!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 03:12 pm
noida-building-collapse-3-dead

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த ஒரு அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்துள்ளனர். 

நொய்டாவின் ஷாபேரி பகுதியில், 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டுமான பணிகளில் இருந்தது. நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், இந்த கட்டிடம், அருகே இருந்த மற்றொரு கட்டிடத்தின் மீது சரிந்தது. இதனால், இரண்டு கட்டிடங்களும், இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் கட்டிடத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று இரவு முதல், அந்த பகுதியின் காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரிடர் பீட்புப் படையை சேர்ந்த 4 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close