சபரிமலை கோவிலில் பெண்களுக்கும் அனுமதி?

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2018 08:49 am
there-is-an-equal-rights-to-both-men-and-women-for-praying-in-temple-says-sc

கோவிலில் வழிபாடு செய்ய ஆண்களைப்போல் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

சபரிமலை கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை அனுமதிக்க கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதி சந்திர சூட் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அவர், "வழிபாடு என்பது சட்டம் சார்ந்தது கிடையாது.  கோவிலுக்கு செல்ல எந்த பாகுபாடும் காட்டக்கூடாது. கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த ஆண்களைப்போல் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. பெண்களை வழிபாடு செய்ய அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" என்றார். 

மேலும், "பெண்களை சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனுமதி அளித்தால் கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்று கூறுகிறீர்கள். எதன் அடிப்படையில் புனிதம் கெட்டுவிடும் என்று சொல்கிறீர்கள்? இதுவரை எந்தவித வலுவான காரணங்களும் முன்வைக்கப்படவில்லை. சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்பது தான் கேரள அரசின் நிலைப்பாடு" எனக் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close