• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை இல்லை: கோவில் நிர்வாகம் அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 18 Jul, 2018 05:04 pm

tirupati-devasthanam-revokes-decision-will-allow-darshan

திருப்பதியில் ஆகஸ்ட் 9 முதல் 17ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு  தடை விதிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 12 தேதி முதல் 16 தேதி வரை திருமலையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதனால் ஆகஸ்ட் 9ம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17ம் தேதி காலை 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து பக்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு அமைப்பினர் புகார் அளித்தனர். 

இதையடுத்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலா தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு  தடை விதிக்கப்பட்டது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆனால் மற்ற நாட்கள் போல் அல்லாமல் குறைந்த அளவிலே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஒரு நாளைக்கு 15,000 பேர் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
[X] Close