கேரளா வெள்ளம்; பலி 16 ஆக உயர்வு!

  SRK   | Last Modified : 19 Jul, 2018 02:49 am

kerala-rains-death-toll-rises-to-16

கேரளாவின் மத்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக மாறி, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை காரணமாக ஏற்பட்ட பல்வேறு சம்பவங்களில் பலர் இறந்தனர். நேற்று இரண்டு பேர் வெவ்வேறு சம்பவங்களில் இறந்ததை தொடர்ந்து, பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

பொதுமக்கள் 10,000 பேர் பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த நான்கைந்து நாட்களுக்கு மழை தொடரும் என்றும், மாநிலத்தின் வடக்கு பகுதிகளுக்கு முன்னேறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா ரூ.1000 வழங்க முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close