2014-16 ஆண்டில் 1,10,333 வன்புணர்வு வழக்குகள்: கிரண் ரிஜிஜூ தகவல் 

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 12:43 pm
1-10-333-cases-of-rape-in-india-in-2014-16-union-minister-kiren-rijiju-to-parliament

2014-2016 ஆண்டுகளில் நாடெங்கும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் வன்புண்ர்வு வழக்குகள் பதிவாகி உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று (வியாழக்கிழமை) தொடங்கியது. அப்போது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும் என்விபது உள்ளிட்ட விவாதங்கள் எழுந்தன. 

இந்த நிலையில், மாநிலங்களவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றச் சம்பங்கள் தொடர்பான எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் கிரெண் ரிஜிஜு, 2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் நாடுமுழுவதும் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.

அதில் அதிகபட்சமாக 2016ஆம் ஆண்டில் 38 ஆயிரத்து 947 வழக்குகளும், 2015-ம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 வழக்குகளும் மற்றும் 2014ம் ஆண்டில் 36 ஆயிரத்து 735 வழக்குகளும் பதிவானதாக அதிர்ச்சிகரத் தகவலை அவர் அளித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close