உத்ரகாண்டில் பஸ் கவிழ்ந்து 10 பேர் பலி

  திஷா   | Last Modified : 19 Jul, 2018 03:34 pm

uttarakhand-10-killed-nine-injured-as-bus-falls

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூர்யாதர் என்ற இடத்தில் 25 பேருடன் சென்ற அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்தது. பள்ளத்தின் ஆழம் சுமார் 250 மீட்டர் இருக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதில் 10 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர். விபத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தவிர, இறந்தவர் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதோடு விபத்து தொடர்பான விசாரணையும் முடுக்கி விடப் பட்டுள்ளது. 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close