மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு இல்லை? 

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 12:23 pm
is-aiadmk-supports-no-confidence-motion-against-bjp-govt

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று(ஜூலை 18) தொடங்கியதை அடுத்து, முதல் நாளே மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதற்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்குமா என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

இன்று மேட்டூர் அணையைத் திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசுகையில், "நாம் பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளோம். ஒரு காலத்தில் காவிரி பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும்போது, தெலுங்கு தேசம் கட்சி எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு மாநில கட்சிகளும் அவரவர் பிரச்னைகளுக்கு தான் குரல் கொடுக்கின்றன. ஆந்திராவின் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நோக்கிலே தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.  

காவிரி பிரச்னையின் போது அ.தி.மு.க எம்.பிக்கள் 22 நாட்கள் அவையை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது எந்த கட்சிகளும் நமக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. எனவே தெலுங்கு தேசம் கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நாமும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை" என்றார். 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close