கடற்படை போர்கப்பல்களைத் தகர்க்க தீவிரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 08:47 pm
jaish-terrorists-training-in-deep-sea-diving-to-hit-navy-warships-sources

இந்திய கடற்படைக்குச் சொந்தமான போர்க்கப்பல்களை ஆழ்கடலில் ஊடுருவி தகர்க்க ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பினர் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. 

இது தொடர்பாக உளவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "இந்திய கடற்படை கப்பல்களைத் தாக்க ஜெய்ஷ் - இ முகமது தீவிரவாதிகள் பாகிஸ்தான், பகவல்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆழ்கடல்களில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றனர். அதற்கான திட்டங்களை அவர்கள் நெடுங்காலமாக வகுத்து வருகின்றனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவின் முக்கியமான ஏவுகணைத் தாங்கி நீர்முழ்கிக் கப்பல்களான ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிகாட் மற்றும் அணு குண்டு தாங்கி நீர்மூழ்கிக் கப்பல்கள்களை பாதுகாக்குமாறு கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து துறைமுகங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், ஆழ்கடல் கண்காணிப்பை பலப்படுத்தவும் அறிக்கை அனுப்பியுள்ளது. 

சர்வதேச நாடுகளின் அனைத்து கடற்படைகளும் தங்களது கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. கடந்த 2000ஆம் ஆண்டில், ஏமனில் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கோல் என்கிற கப்பலை அல் கொய்தா தீவிரவாதிகள் வெடிகுண்டுகள் நிறைந்த படகைக் கொண்டு தாக்கியதில் 17 அமெரிக்க கடற்படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close