Breaking : சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க முடியாது: நிர்வாகம்

  Newstm Desk   | Last Modified : 28 Sep, 2018 08:49 am

sabarimala-temple-management-answers-scs-question-regarding-allowing-women

சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என கோவில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பொது நல வழக்கின் மீதான விசாரணை தொடர்ந்து 3வது நாளாக இன்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. நேற்று நடந்த விசாரணையின் போது பேசிய நீதிபதி, "வழிபாடு என்பது சட்டம் சார்ந்தது கிடையாது. கோயிலுக்கு செல்ல எந்த பாகுபாடும் காட்டக்கூடாது. கோயிலுக்குள் சென்று வழிபாடு நடந்த ஆண்களைப் போல பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. பெண்களை அனுமதிக்காமல் இருப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது" என்றார். மேலும் பெண்களை கோயிலுக்குள் அனுமதித்தால் என்ன? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், இன்றைய விசாரணையில் கோயில் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

அதில், "10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது. மாதவிடாய் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் வந்தால் புனிதம் கெட்டுவிடும். அவ்வாறு நடந்தால் அது ஆகம விதிகளுக்கு எதிரானதும் கூட. இது மதம் சார்ந்தது என்பதால் நீதிமன்றம் தலையிடக்கூடாது" என தெரிவித்திருந்தது. 

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியின் போது இந்த பிரச்னையில் அரசு, கோயில் நிர்வாகம் பக்கம் தான் இருந்தது. ஆனால் தற்போது உள்ள அரசு பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக உள்ளது. எனவே நீதிமன்றம் கோயில் நிர்வாகத்தின் கருத்துக்கு எதிராக தீர்ப்பு வழங்கும் பட்சத்தில் கேரளாவில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close