நொய்டா: சரிந்து விழுந்த 2 கட்டிடங்கள்; பலி 9 ஆக உயர்வு!

  Newstm News Desk   | Last Modified : 19 Jul, 2018 01:37 pm

noida-building-collapse-death-toll-rises-to-9

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நேற்று இரண்டு கட்டிடங்கள் சரிந்து விழுந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

நொய்டாவின் ஷப்பேரி பகுதியில், கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று நேற்று சரிந்து விழுந்தது. அருகே உள்ள கட்டிடத்தில் சரிந்து இந்த கட்டிடம் சரிந்து, இரண்டு கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கிய நிலையில், 4 பேர் இறந்ததாக நேற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, போலீசார் என பல குழுக்களாக இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இன்று காலை மேலும் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக உயிரிழந்துள்ளது. 

இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் வழங்க, உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.