புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்.பி.ஐ!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 03:57 pm
rbi-to-release-new-design-rs-100-note

புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை இன்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. 

இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையினை மேற்கொண்டது. அதன்படி, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பதாக அறிவிக்கப்பட்டன. இதனால் நாட்டில் சில்லறை தட்டுப்பாடு நிலவியது. 

இதனை போக்கும் வகையில், ரூ.2000, ரூ.500 ரூபாய் நோட்டுகள் புதிய வடிவில், பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ரூ.200 நோட்டுகள் வெளியிடப்பட்டன. 

இதையடுத்து தற்போது 100 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விட இருக்கிறது. இதற்கான மாதிரி இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, புதிய 100 ரூபாய் நோட்டுகள் ஊதா(லாவண்டர்) நிறத்தில் உள்ளது. பழைய ரூ. 100 நோட்டை விட அளவில் சிறியதாக இருக்கும். புதிய 10 ரூபாய் நோட்டை விட பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் நோட்டின் பின்புறத்தில் குஜராத் ராணி படிக்கல் கிணற்றின் படம் இடம்பெற்றுள்ளது. புதிய நோட்டுகள் விடப்பட்டாலும், பழைய 100 ரூபாய் நோட்டுகளும் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close