நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு!

  Newstm Desk   | Last Modified : 19 Jul, 2018 05:52 pm

aam-aadmi-party-will-support-no-confidence-motion-against-bjp

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று(ஜூலை 18) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தது போலவே, நேற்று முதல் நாளே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த இந்த தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். நாளைய கூட்டத்தொடரில் இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் மாநில கட்சிகள், தாங்கள் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்பது குறித்து கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசுக்கும், டெல்லி அரசுக்கும் மோதல் நிலவி வருவதால் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிராக தான் ஆம் ஆத்மி இருக்கும் என கணிக்கப்பட்டாலும், கட்சியின் சார்பில் இந்த அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் அ.தி.மு.க அரசு, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என கூறிவிட்டது. 

 

 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close