• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

ஈரானுடனான உறவில் 3ஆம் நபர் தலையிட முடியாது: இந்தியா திட்டவட்டம்  

  Padmapriya   | Last Modified : 19 Jul, 2018 10:26 pm

our-bilateral-relationship-with-iran-stands-on-its-own-india

ஈரானுடனான உறவில் 3வது நாட்டின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மக்களவையில் ஈரான் - இந்தியா வர்த்தக உறவில் அமெரிக்கா தரும் அழுத்தம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு வெளியுறவுத் துறை .வி.கே. சிங் பதிலளிக்கையில், "ஈரானுடனான உறவை, சுதந்திரமாகவே இந்தியா முடிவு செய்யும். இந்த விவகாரத்தில் 3வது நாட்டின் தலையீட்டுக்கு இடமே இல்லை. இது தொடர்பாக நமது  நலன்களைக் காக்கத் அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கிறது. ஈரானுடனான அணுசக்தி தவிர்ப்பு ஒப்பந்தத்திலிலிருந்து அமெரிக்கா விலகியதால் நேரிடும் பாதிப்புகள் உள்ளிட்டவற்றை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நவம்பர் மாதத்திற்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகள் முழுமையாக நிறுத்திக் கொள்ள வேண்டும், இல்லையெனில் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பகிரங்க எச்சரிகையை விடுத்தார்.

ஈரானுடனான அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்ததையடுத்து, அங்கிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கைவிடுமாறு பிற நாடுகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை கைவிட்டால், இந்தியா அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். அதன் மூலம், அமெரிக்க கச்சா எண்ணெய் இந்திய சந்தையில் நுழைவதற்கு பெரும் வாய்ப்புண்டு. இந்தியாவின் எண்ணெய் தேவைகள் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதால், அந்த சந்தையைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சி செய்வதாக சர்வதேச அரங்கில் பெரிதாக பேசப்படுகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close