• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

ஒவ்வொரு யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன- உச்சநீதிமன்றம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Jul, 2018 08:35 pm

each-union-territory-has-separate-powers-says-supreme-court

புதுச்சேரி, டெல்லி என ஒவ்வொரு யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன என புதுச்சேரி பேரவையில் நியமன எம்.எல்.ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 3 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. மேலும் புதுவை பேரைவைக்குள் பாஜகவை சேர்ந்த 3 நியமன எம்.எல்.ஏக்களை அனுமதிக்கவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி, டெல்லி என ஒவ்வொரு யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனி அதிகாரங்கள் உள்ளன என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் டெல்லிக்கு தனித்தனி அதிகாரங்கள் உள்ளதால் அதன்படியே விசாரணை நடக்கும். ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட முடியாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி பேரவையில் நியமன எம்எல்ஏக்களை அனுமதிக்க மறுக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

Advertisement:
[X] Close