கிரண்பேடி பாஜகவின் ஏஜெண்ட்- நாராயணசாமி சாடல்

  ஐஸ்வர்யா   | Last Modified : 19 Jul, 2018 07:24 pm
kiran-bedi-is-a-agent-of-the-bjp-says-narayanasamy

கிரண்பேடி பாஜக ஏஜெண்டாக செயல்படுவது உறுதியாகிவிட்டது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். 

புதுச்சேரியில் இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய நாரயணசாமி, “அரசுக்கு களங்கம் விளைவிக்க வேண்டியே நிதி மசோதாவிற்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு கிரண்பேடிதான் பொறுப்பு, நிதி மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காததால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதிலிருந்தே கிரண்பேடி பா.ஜ.க ஏஜெண்டாக செயல்படுவது உறுதியாகிவிட்டது 

பட்ஜெட் மீதான ஒப்புதல் காலதாமதத்திற்கு மத்திய அரசின் மெத்தனபோக்குத்தான் காரணம் எனக்கூறிய அவர், பட்ஜெட்டுக்கான அனைத்து மானியக்கோரிக்கை மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்திய பின்பும், நிதி மசோதா தாக்கல் செய்யும் சட்ட வரைவை ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைத்தும், ஒப்புதல் அளிக்காததால் இன்று பேரவையில் நிதி மசோதா தாக்கல் செய்யமுடியாமல் போனது. விரைவில் புதுச்சேரி கிரண்பேடியின் நிலைப்பாடு குறித்து குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளேன். மத்திய அரசு ஒரு புறம் நெருக்கடி, மாநிலத்தில் ஆளுநர் கிரண்பேடியின் தொல்லையால் மக்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் ஒருபக்கம் நெருக்கடி என பல பிரச்னைகள் உள்ளன. விரைவில் விடிவுகாலம் பிறக்கும்” என தெரிவித்துள்ளார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close