அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்த ப.சிதம்பரம்: சிபிஐ

  SRK   | Last Modified : 20 Jul, 2018 10:09 am

p-chidambaram-exceeded-his-mandate-for-aircel-maxis-cbi

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதியளித்ததாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. 

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உட்பட 16 பேரை சிபிஐ குறிப்பிட்டுள்ளது.  அப்போதைய அமைச்சர் சிதம்பரம் தனது அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தன்னிச்சையாக தனது பொருளாதார ஆலோசகர்களிடம் கலந்தாலோசிக்காமல், வெளிநாட்டு முதலீடுகளுக்கு ஒப்புதல் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு விதிகளின் படி, ரூ.600 கோடி அல்லது அதற்கு மேலான முதலீடுகளுக்கு அனுமதியளிக்க, பொருளாதார விவகாரங்கள் கமிட்டிக்கு தான் உரிமை உண்டு என்றும், ஏர்செல் மெக்சிஸ் விவகாரத்தில் சிதம்பரம், சுமார் ரூ.3520 கோடி முதலீட்டுக்கு கமிட்டியை நாடாமல் அனுமதியளித்தாக விளக்கம் கொடுத்துள்ளது சிபிஐ. அடுத்தகட்ட விசாரணையை இந்த மாதம் 31ம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close