மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: இன்று வாக்கெடுப்பு

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 10:55 am
modi-s-government-to-face-its-first-no-confidence-motion-today

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இன்று வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது.

மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்தனர். 50க்கும் மேற்பட்ட  உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்ததால், இதைக் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த  சபாநாயகர், நோட்டீஸ் கொடுத்த எதிர்க்கட்சி  உறுப்பினர்களின் பெயர்களை  வாசித்தார்.

இந்த தீர்மானம் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கும் எனவும், முடிவில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 7 மணி நேரம் நடக்க உள்ள  இந்த விவாதத்தில் ஆளும் பா.ஜ.க அரசு பேச 3.5 மணிநேரமும் காங்கிரசுக்கு 38 நிமிடங்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு முதலில் கோரிக்கை வைத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் பின்னர் மல்லிகார்ஜுனாவும் பேசவுள்ளனர். 

கடந்த நான்கு ஆண்டு கால ஆட்சியில் மோடி தலைமையிலான ஜனநாயக கூட்டணி அரசு சந்திக்கும் முதல் நம்பிக்கையில்லா தீர்மானம் இதுவாகும். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close