ஜனநாயகத்தில் இன்று முக்கியமான நாள்: மோடி

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 10:56 am
today-is-an-important-day-in-our-parliamentary-democracy-modi

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இது ஜனநாயகத்தில் முக்கியமான நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. அதற்கு முன்னர் காலை 11 மணி முதல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "இன்று நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் முக்கியமான நாள். என்னுடைய சக எம்பிக்கள் ஆக்கபூர்வமான, விரிவான மற்றும் இடையூறு இல்லாத விவாதத்தை நடத்துவார்கள் என நம்புகிறேன். மக்களுக்கும் நமது அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம். நாடே நம்பை உற்று கண்காணித்துக்கொண்டு இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close