நாடாளுமன்றத்தில் 38 நிமிடம் நிலநடுக்கம் தான்: ராகுல் காந்தியை கலாய்த்த பா.ஜ.க தலைவர்!

  Newstm Desk   | Last Modified : 20 Jul, 2018 11:16 am

38-minutes-for-earthquake-ram-madhav-trolls-congress-chief

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதத்தில் ராகுல் காந்தி பேசும் போது நிலநடுக்கம் வரும் என்று பா.ஜ.க-வின் ராம் மாதவ் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ளது. விவாதத்தின் தொடர்ச்சியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது. 

விவாதத்தின் போது ஒவ்வொரு கட்சியும் பேச நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் ஆளும் பா.ஜ.க அரசு 3.38 மணி நேரம் பேச உள்ளது. காங்கிரசுக்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதலில் நோட்டீஸ் கொடுத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பா.ஜ.க தலைவர் ராம் மாதவ், "13 நிமிடங்கள் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கேட்டவர்களின் விவாதம் நடைபெற உள்ளது. 38 நிமிடங்கள் நிலநடுக்கம் தான்" என பதிவிட்டுள்ளார். 

முன்னதாக ராகுல் காந்தி, "தான் சபையில் பேசினால் நிலநடுக்கம் வரும்" என்று தெரிவித்திருந்தார். அதனை விமர்சிக்கும் வகையில் ராம் மாதவ் இவ்வாறு ட்வீட் செய்துள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close